Wednesday, July 28, 2010

அவள் அவன் நான்

அவள் யார் என்று தெரியவில்லை, தெரிந்திருக்கவும் வாய்பில்லை, என் வட்டாரத்தில் இத்தனை அழகான பெண்கள் எப்போதாவது தான் காணகிடைப்பார்கள். அவள் அழகாய் இருந்தாள் ஒரு செல்ல நாய் குட்டியின் குறும்பு அவளது ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்டது.

அவளது வயது இருபது இருக்கலாம். அவளை பற்றி நான் யோசிப்பதற்கு
அவள் அழகாய் இருப்பதற்கும் சம்மந்தமில்லை. அவளது முகம் எனக்கு மிகவும் நெருக்கமானதாக தோன்றியது.  அவள் அருகில் அமர்ந்திருக்கும் அந்த ஜீன்ஸ் இளைஞன் அவளது கணவனா காதலனா, என்பது தெரியவில்லை.  அவள் கழுத்தில் தாலியில்லை அந்த இளைஞன் குழைந்து குழைந்து பேசுவதை பார்க்கும் போது இருவரும் கல்லூரி தோழர்களாக இருக்கலாம் அல்லது காதலர்களாக இருக்கலாம். அந்த இளைஞன் மிகவும்
 சகஜமாக அவளது தோளில் கைபோட்டவறே பேசியதும், அவளை உரசிகொண்டு உட்கார்ந்து இருப்பதும் செயற்கையாக இருந்தது, இந்த பெண்னும் ஒரு செயற்கையான வழிந்தலுடன் அந்த ஜீன்ஸ் இளைஞனிடம்
பேசி கொண்டு இருந்தாள். 

பேருந்தில் பலரது பார்வையில் அவர்கள் மீது குவிந்திருப்பதை அவர்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. எனக்கு அவளது பெயர் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது அவளிடம் சென்று கேட்பதற்கு பெரிய காரணம் தேவையாக இருந்தது. அத்தகைய காரணம் எதுவும் இல்லை அவளது பெயர் பிரியா என்றோ லதா என்றோ இருக்கலாம். அவளை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் என்னுடைய இருக்கையை விடுவதற்கு உடல் ஒத்துழைக்கவில்லை என் ஜம்பதாவது பிறந்தநாளிலிருந்து தீராத மூட்டி வலியால் அவதிபடுகிறேன். போன வாரம் பாத்ரும்யில் வழுக்கி விழுந்து விட்டேன். 

இப்போது பேருந்தில் கூட்டம் குறைந்து விட்டது. அந்த பையனும் அவளும் நானும் இன்னும் சிலரும் இருந்தோம் நான் எழுந்து அவர்கள் அருகில் அமர்ந்தேன். அவள் இளைஞன் கரங்கள் ஒரு ஆண்மையின் ஆணவத்துடன் அவளது தோளை அனைத்து கொண்டு இருந்தது. அவர்கள் நெருக்கமாக இருந்தார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. அந்த இளைஞன் சொன்னான் " நாளை சத்யம் தியெட்டருக்கு வந்துடு" நான் இறக்கும் இடம் வந்து விட்டது, அவர்களும் என்னுடன் சேர்த்து இறங்கினார்கள். 

அவளிடம் எனக்கு சொல்ல வேண்டிய
விசயஙகள் சில இருந்தன. " அவளை எப்படி கூப்பிடுவது என்று யோசித்து கொண்டு இருந்தேன் அவள் என்னை நோக்கி வெகமாக வருவது தெரிந்தது.
அவள் முகத்தில் ஒரு பதட்டம் தெரிந்தது அவள் கூறியது எனக்கு புரியவில்லை " அப்பா இவ்வளவு நாள் எங்கே போனிர்கள் "

வாசகர்கள் கதையை தொடரலாம். 

No comments:

Post a Comment