Monday, October 25, 2010

முடியா கனவு

சலனமற்று இருந்தது அந்த ரயில் நிலையம், நானும் இன்னும் சிலரும் காத்திருந்தோம்,
பார்வை ரயில் வரும் திசையில் குவிந்திருந்தது. கடிகார முட்கள் மணி பதினொன்று
என்று காட்டியது. “சனியனே சும்மா இருக்க மாட்டே” சத்தம் வந்த திசை நோக்கி
பார்வை திரும்பியது. பச்சை பாவாடை அணிதிருந்த அந்த சிறுமியை ஒரு பெண்
அடித்து கொண்டு இருந்தாள். என் பார்வை அவர்கள் மிதி குவிந்தது, அங்கு இருந்த
மற்றவர்கள் பார்வையும். என்னுடன் ஒரு கல்லூரி மாணவனும், ஒரு நடுத்தர வயது
மீசை மனிதரும் இருந்தனர். “ஏண்டி குழந்தை அடிக்கிறே பாவம் அதுக்கு என்ன
தெரியும் பச்சை மண்ணு” அந்த பெண் தன் கணவனை பொசுக்கி விடும் கோபத்துடன்
பார்த்தாள்”“ஏய் சும்மா கிடே ஏதாவது பேசுனே இப்படியே போயிடுவேன்”
இதை சொல்லிவிட்டு குழந்தையை தரதரவென்று இழுத்து சென்று ஒரு ஒரத்தில்
அமர்ந்தாள். நான் என் பையை திறந்து “ஆனந்த விகடன்” பிரித்தேன்.
“ஏங்கே வண்டி எத்தனை மணிக்கு வரும் “அந்த பெண்மணியின் கணவன்,
அழுக்கு வேஷ்டியும், கலைந்த சட்டையும், அணிந்திருந்த அந்த மனிதனின் முகமும்
வார்தை தொனியும் கிராம வாடை விசியது. “இப்ப வந்துடும்”
அந்த மனிதன் தன் சட்டைக்குள் இருந்து சீக்ரெட்டை
எடுத்தான். “சீக்ரெட் பிடிப்பீங்களா” “பழக்கமில்லை” ரயில் வரும் சத்தம் கேட்டது.
“ஏய் வா” ரயில் பெட்டி இரவின் பேரமைதியை சுமந்திருந்தது. “சிக்ரெட் புகை
அருவருப்பாக இருந்தது. “கொஞ்சமாவது அறிவிருந்தா இப்படி பண்ணுவானா”
“விடு அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்” “மனசு அற மாட்டெங்குது,
பாராமா இருக்கு” ஒரு கதை இவர்களுக்குள் இருக்கிறது என்று மனம் சொல்லியது
அந்த சிறுமி இப்போது,ஆமைதியாக இருந்தாள், ஜன்னல் ஒரம் உட்கார்ந்திருந்தாள்,
சிவதிருந்த அவள் கண்கள் பயத்தை அப்பி கொண்டு இருந்தன.
“சென்ட்ரல் போக எவ்வளவு நேரமாகும், “இரண்டு மணியாகும்”கண்கள்
தூக்கத்தில் கனத்தது. “ என் பையை தலைக்கு வைத்து கால் நிட்டினென்,
அந்த பெண்னின் குரல் கேட்டு கொண்டே இருந்தது.
“என்ன பாவம் பண்ணென் சொல்லுடா, உன்னை கட்டினே பாவத்து
நல்ல அனுபவிச்சிட்டேன், இன்னும் என்ன வேண்டி கிடக்கு, நீயே
என் கழுத்தை நெரிச்சு கொன்னுடு” ஆழாதம்மா நமக்கு ஒரு காலம் வரும் அப்போ
பேசிக்கலாம். “எனக்கு இப்போ எப்படி இருக்கு தெரியுமா, உடம்பு எல்லாம் ஏறியுது
அந்த வேசி மகன் என்ன பேச்சு பேசிட்டான், எல்லார் முன்னிலையிலும் திருடி சொல்லி
ஆளெ வைச்சி செக் பண்ணி, உயிரொடு இருக்க கூடாது, அவள் தன் கையால்
முகத்தை அடித்து கொண்டாள். அந்த சிறுமி தன் அம்மாவை வெறித்து பார்த்து
கொண்டுருந்தாள்.“ஏய் ஏய் என்ன பண்றே, “அவன் படுவாண்டி நல்ல அனுபவிப்பான்,
அந்த மனிதன் அவள் கையை பிடித்து தடுத்தாள், “கையை விடுடா,
தம்பி தம்பி சொன்னியே அந்த பாவி இவ்ளோ செஞ்சதுக்கு
அப்புறமும், அவனை வெட்டி போடமே மரம் மாதிரி நிக்கிறே நீயும் ஒரு மனுசனா”
அவர்களின் கதை என்னுள் வளர்த்தபடியே இருப்பதை உணர முடிந்தது.
நீண்ட அழுகை சத்தத்தை தொடர்ந்து ஒரு பெரும் நிசப்தம் நிலவியது,
கண்கள் திறந்த போது, அந்த பெண் கம்பியை பிடித்தபடியே வெளியே
பார்த்தப்படி இருந்தாள். அவள் முகத்தை உற்றி நோக்கினேன், அழுது அழுது
அவள் கண்கள் சிவந்திருந்தன பெரிய பொட்டு வைத்திருந்தாள்,
சிவப்பு நிறத்தில் பூப்பொட்ட புடவை, பெரிய கண்கள், அந்த கண்கள்
அசைவற்று வெறித்து பார்த்தபடி இருந்தது, அந்த இரவில் எனக்கு
அச்சவுணர்வை அளித்தது. இன்னும் அரை மணி நேரத்தில் ரயில் சென்ட்ரலை
அடைந்து விடும் இந்த இறுக்கமான இரவுக்கு ஒரு முடிவும்
வந்துவிடும். அந்த சிறுமியும் அந்த மனிதனும் தூங்கத்தில் அழ்ந்திருந்தார்கள்.
அந்த சிறுமிக்கு ஆறு வயது இருக்கலாம், அவள் அம்மாவை போலவே அகலமான
கண்கள். தன் தந்தையின் மடியில் படுத்து இருந்தாள். நிண்ட நேரம் அவள்
வெறித்தப்படி நின்றிருந்தது.எனக்கு விபரிதமாய் தோன்றியது
அந்த ஆள் எழுந்து கொண்டால் நல்லது என்று தோன்றியது. அவளிடம் சென்று
அவளுகு என்ன நேர்ந்தது என்று கேட்க வேண்டும் என்று தோன்றியது,
அவளது கதையில் இட்டு நிரப்ப வேண்டிய பத்திகள் இருந்தன,
ஆனால் அவளது கதை விபரிதமாய் முடிந்து விடுமோ என்ற அச்சம் என்னை
ஆக்ரமித்தது .அந்த பெண் ஒரு கணம் தன் குழந்தை பார்த்தாள்.
பெரும் அலறலை தொடர்ந்து அவளது காட்சி மறைந்தது.
அந்த பெண்னை அதன் பிறகு பல முறை ரயில் நிலையத்தில் பார்த்து விட்டேன்.
அவள் கதை முடிக்கபடாமல் என் கனவை துரத்தியபடி உள்ளது அன்று முதல்.

No comments:

Post a Comment