Showing posts with label கவிதை(தேடல்). Show all posts
Showing posts with label கவிதை(தேடல்). Show all posts

Sunday, May 15, 2011

மொழி

வினை, எதிர்வினையாய்
ஊர்ந்திடும் காலம்,
உறைந்திடும் நொடியதில்
லயித்தி கிடக்கும் உயிர்
நின் மொழியின் வருடலில்
மவுனம் துறந்த கணமதில்
இசையறிந்தேன் இசையானேன்.

Saturday, May 14, 2011

பிரிவு

நிறைந்திருக்கும் மவுன கணங்கள்
சந்திப்பின் சாட்சியாய்
மிஞ்சி இருக்க
தனிமை திண்டலில்
உன் ஸபரிசத்தை
நுகரும் உயிர்
உன்னை தன்னுள் வரைந்திடும்.

Sunday, October 31, 2010

முடிவிலா ஏக்கம்.

கரைகின்றே காலமதன்
பிடி அறுத்து, சிறகணிந்து
முடிவிலா பெருவெளியில்
உறைகின்ற ஒரு கணத்தின்
காத்திருப்பில் நகர்ந்திடும் நாள்கள்.

Monday, October 11, 2010

கதைவெளி

நதி கடக்கும் சுவடுகளின்
புதைந்துள்ள கதைகள் எல்லாம்,
வாசகர் தேடி அலைகின்றன காற்றலைகளில்
சொல்வதற்கான கதை இருந்த போது,
சொல்லாமல் முடிந்த கதைகள் எத்தனையோ
முடிவற்ற கதைவெளியில் உலகம்
பயணித்துப்படியே இருக்கிறது முடிவற்று

Thursday, October 7, 2010

அகலா நினைவுகள்

மனசுவரில் ஒட்டி கிடக்கிறது
வார்தைகள் எனும் பட்டாம்பூச்சி
எப்போதும் போல் இப்போதும்
சொல்ல தோன்றவில்லை
மனதோடு உனக்கு சொன்னவற்றை
நீர் நனைக்கும் உன் விழி
சுமந்து விடைபெறுகிறேன் தோழி
காட்சி கடந்த பின்பும்
தொடரும் உன் கண்யசைவின் பிரதி.

நினைவின் நிழல்

நதி கடக்கும் சுவடுகளின்
முகவரி தேடியலையும்
மனம் காத்திருக்கிறது
வெறுமையின் திரை உதற
சிறகுகள் பூட்டிய சிறுபறவையாய்
வெதும்பு கிடக்கும் மனம்
தோண்டி எடுக்கிறது
எழும்புகளை நுகரும் நாய் போல
இறந்து போன பெரும்நினைவுகளை.

Wednesday, October 6, 2010

இசை

இசை எனும் இளம்பெண்
காத்திருக்கிறாள் தன் காதலனுக்கு
அகத்தின் விழிப்பில் பிறக்கும்,
இசையின் உறைவிடம்
அறிந்த இசை ராஜன்
எங்கு உறைக்கிறான்,
அவன் ஸ்பரிச திண்டலில்
என் ரொமங்கள் பூச்சொரிய
ஏகந்த வெளையின்
மெய்மையின் ஒளி பிறக்கும்.

நிகழ்வுகள்

நிகழ்வுகள்
நிறைந்த வாழ்க்கை சோர்வு அளிக்கிறது,
ஒர் அரசனின் மதுக் கோப்பை போல
நிரப்பட்டு கொண்டே இருக்கிறது,
வாழ்க்கை நிகழ்வுகளால்,
உடலின் ரோமங்களை போல
உதிர்த்திடவே ஆசை
நிகவுகளிலிருந்து,
ஆனால் ஒரு நாய் போல
துரத்தி வந்து
ஒளிவதற்கு இடமின்றி
விழுங்கி நிற்கிறது.

பிரிவின் இசை

நேற்று, இன்று, நாளை
என கடந்து செல்லும் காலம்
என்னை இட்டு செல்கிறது
முடிவற்ற ஒர் பெரும்வெளிக்கு,
நம் உள்ளகையின் வழியே
ஒழுகி கரையும் இவ்நொடிகள்
மட்டுமே என் நினைவின் மிச்சமாய் உனக்கு,
உன் கை உதறும் துணிவற்ற
என் விழிகள் கோரும் உன்னிடம்,
விடுவித்தி விடையளிப்பாய்.

Monday, October 4, 2010

முகமற்ற ஒலி

எங்கோ பெருவெளியில்
ஒலிக்கும் சிறு சப்தம்
என் அறையின் சிறு முனகலாய்,
என் காதுக்களுக்குள் கசிகிறது.
என் கரங்கள் நிளும் திசையில்
அவ் சப்தம் மவுனம் கொள்கிறது.
முகமற்ற ஒலியின்
முகவரி அறியா மனதின்
தேவையாய் அச் சிறு ஒலி மட்டுமே உள்ளது.

Saturday, September 18, 2010

வண்ணம் தின்னும் புச்சி

வண்ணம் தின்னும் சிறு புச்சியினம் ஒன்று
என்  அறைதனில் புகுந்து   
வண்ணங்களை தின்று தீர்த்து    
தோட்டத்தின் பக்கம்  நகர்ந்தது.   
வண்ணமற்று போன அறை  
வெட்கம் பொங்க இருளால்    
தன்னன போர்த்தி கொண்டது.  
இனி அது நேற்றைய நினனைவின்  
சாட்சி மட்டுமே.  

Wednesday, September 15, 2010

தேடல்

அவளது திருமுகத்தில் ஒளிரும்
சிறுநகைப்பின் பிரதி
ஒரு கனவின் நிட்சியாய்
என்னுள் தேங்கி கிடக்கிறது.
திரையிட்ட அவளது பேரழகு
வழிந்தோடி என் குவளையில்
நிறைந்து வழிகிறது.
அவள் சிறு விரல் தீண்டலில்
உயிர் பெறும் பொன் நிற வண்டுகள்
மொய்த்து கிடக்கின்றன என் தோட்டதில்
அவள் வாசம் விட்டு சென்ற பதிவை
கொண்டு அவளை தேடி அலைக்கிறேன்
சப்தமற்ற பெருவெளியில்
நின்று அவள் அழைக்கிறாள்.

தேடல்

காகித குப்பைகளின் குவியல்
கிடக்கிறது மண்டியாய்
நாற்றதின் கரங்கள் நிண்டுள்ளன
என் நாசி வரை
பெரும் தீயொன்று புசியும்
நாளன்று சாம்பல் காடாகும் என் அறை
என் ஜன்னலுக்கு அப்போது வெளிச்சம் கிட்ட கூடும்.

Tuesday, September 14, 2010

நாயும் பறவையும்

சிறகு உடைந்த சிறு பறவை
சலனமற்று விழ்ந்து கிடந்தது என் தோட்டம் தனிலே

உறக்கம் தவிர்த்த நாயது பறவையை பிய்த்து தீன்று
பெரும்பசி பொங்கிட காத்து நின்றது.

சிறு பெட்டியில் பூட்டி வைத்தேன்
பறவைதனை காத்திடே

தின்ன உணவு இல்லா நாயும் செத்து விழ்ந்தது.
வானம் மறந்த பறவை ஒரு நாள் பெட்டியில் சுரண்டு ஒழிந்தது.

Monday, July 26, 2010

பயணம்

நிண்ட நெடிய பயணத்தின் முடிவு நெருங்கிவிட்டது
இப்பயணமும் இன்னொற்றின் தொடங்கமாகவே அமையும்.
பயணம் இலக்கை நோக்கி அல்ல
பயணமே இலக்காக அமைந்து விட்டது.
நான் பயணிக்கிறேன் கால அளவுகளின் உறுத்தலின்றி
காலதேவன் அழைத்து செல்வான்
மெய்மையின் உறைவிடம் நோக்கி