Saturday, July 31, 2010

உள்ளத்தின் இசை

எந்த முன்னுரையுமின்றி புரியப்படுபடுவது கவிதை ஆனால் என் இவ்கவிதைகளூக்கு சிறு
முன்னுரை தெவைப்படுகிறது. இறைவன், நாம் எல்லோரும் தேவையான ஒருவராக இருக்கிறார். ஆனால் மிகவும் தூரத்தில் அவரை என் சமுகம் வைத்திருக்கிறது. கூட்ட நெரிச்சலில் தென்படும் கடவுள் அந்நியமாக இருக்கிறார். என் உள்ளூணர்வுல்
நிறைந்திருக்கும் அவரது உள்ளகையின் வெப்பம் வெளி உலகால் அறிய முடியாதது.
இறைவன் அருகாமை உணர்ந்தால் உங்கள் அகஉலகம் விரிவடையும்.


உன்னிடம் பேசுவதற்காக காத்திருக்கிறேன்.
உன்னிடன் பேசி பல காலம் கடைந்து விட்டன.
இப்போதெல்லாம் முன்னைப் போல் பேச முடிவதில்லை.
இப்போது இங்கே யாரும் இல்லை
நாம் பேசலாம் விடியும் வரை
ஆனால் ஏனோ வர மறுக்கிறாய்.
நீ வருவாய் என்ற நம்பிக்கையில்
இவ்நோடிகள் காத்திருக்கின்றன.
நீயோ இங்கே வருவதில்லை
உன் அரண்மனையோ வெகு தூரம்.
நீ வரும் வரைவில்
வார்தைகளை சேகரித்து வைப்பேன்.
என் காதலா எப்போது வருவாய்.

நிறைந்திருக்கும் சபைகளில்
என் மவுனங்கள் பலரை முகம் சுளிக்க செய்கிற்து.
"இன்றாவது என்னுடன் இருப்பாயா" நண்பன் கேட்டான்.
தலையசைத்தேன்.

சொல்வதற்கும் கேட்பதற்கோ
என்னிடம் எதுமில்லை
சொல்ல சில உண்டென்றால் சொல்லி செல் என்றேன்.

உன் வெறுமையின் காரணம் என்றான்
இது வெறுமை அல்ல என் முழுமை என்றேன்
என்னுடைய யாவும் என்னிடமிருந்து சென்ற பின்
மிஞ்சிய வெறுமையின் முழுமை என்றேன்.


என் கரத்தினை எந்திருக்கும் உன் கரத்தின் வெம்மையில்
சுகமாய் இருக்கிறேன். தந்தை மடிதனில் உறங்கும் சிறு குழந்தைப் போல்.

உன் பார்வையின் சிநேகம்
பருகும் என் கண்கள் சொல்ல துடிக்கும் வார்தைகள் உடைந்து
பெருகும் நீர் உரைக்கும் என் சேதிகளை உனக்கு.

என்ன சொல்ல
வார்தைகளே அந்நியமாய் ஆன பின்னர்.உன் கரத்தினை
இறுக்கமாய் பற்றி கொள்ள தான் தோன்றுகிறது.

மனதின் ஒசைகளும்
மனித ஒசைகளும்
கேட்கா தூரத்தில்
நான் லேசாய் இருக்கிறேன்
சிறு இலையாய்.
உன் அன்பினை சுமந்து.

No comments:

Post a Comment