Saturday, July 31, 2010

உள்ளத்தின் இசை

கொதிக்கும் நீர்ப்பட
கை உதறும்
செவிவழி இசையில்
தலை அசையும்
அனிச்சை செயலாம்.

உன் காதலும்
அனிச்சை செயல்.

எப்போது காதல்கொண்டேன்,
அல்ல அல்ல
எப்போது கண்டுகொண்டேன்.

உன் காதல்
எப்போது என்னூளுண்டு
இருளில் நிறையும்
ஒளி போல.

மயக்கும் மாலை பொழுதில்
ஜன்னலோரம் தோன்றி மறையும்
சிறு குழந்தைகள் முகம்.

பேருந்து பயணங்களில்
பல கதை பேசும்
தந்தைமடி துயிலும்
சிறுவனின் பூமுகம்.

வளர்ந்த பின்
அக்குழந்தைகள் என்னாகும் யார் அறிவார்.

நான் அறிவேன்
உன் அன்பு என்னுள்
நிறைந்து வழிந்து பெருகுமென

வினையின் தந்திக்களில்
ஆயிரம் ராகங்கள் உறைந்து இருந்தாலும்
தேர்ந்த கரங்களில் சேரும் போது தான்
ராகங்கள் பிறக்கின்றன்.
அதுப் போல் தான் ஸ்நகிதேனே
என் மனதில் நிறைந்திருக்கும் காதலும், இசையும்
பிறந்திட உன் வரவுக்காக காத்திருந்தது.
உன் மீது காதல் பிறந்த
நொடிக்காக தான்
வளர்ந்து வந்தேன்
என்று தான் சொல்ல தோன்றுகிறது.
உன்னை அருந்திய போதும்
தாகம் தணியவில்லை.

உன் நினைவுகளால்
நிரப்படாத வேளைகளில்
என் மனம் தந்திக்கள்
அறுந்தி விட்ட வீணைப் போல்
பயனற்று கிடக்கிறது.
உள்ளத்தின் மூலை மூடுக்களில்
தேடுகிறேன் உன் நினைவுகளை
சாதக பட்சியாய் காத்திருக்கிறேன்
உன் நினைவுன் தூளிக்காக

No comments:

Post a Comment