Sunday, August 8, 2010

பெரும் கனவு

பெரும் கனவு

“இவரைப் போன்ற ஒரு படைப்பாளியை இதுவரை தமிழகம் கண்டதில்லை காணபோவதும் இல்லை.”
கேட்டு, பழகிய வார்தைகள், பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

எல்லா பத்திரிகைகளிலும் கவர் ஸ்டோரி, போன வாரம் சன்னில் பேட்டி, ஆனந்த விகடனில் இந்த முறை அதிகமான பக்கங்கள். 4வது முறையாக தேசிய விருது. தமிழ்நாடு தலையில் தூக்கி வைத்து கொண்டாடும். இந்திய டுடேவில் exclusive interview. உலகின் ஒரு மிகப் பெரும் மேடையில் நின்று கொண்டு இருப்பதாக தோன்றுகிறது. “டேய் சினிமா சினிமான்னு அலையிறே நாளைக்கு அது சொறு போடுமா” சொறு மட்டுமல்ல புகழ், அதிகாரம் , பணம், கர்வம், எல்லாவற்றையும் சினிமா அளித்துவிட்டது அப்பா.

அடுத்து உங்கள் அபிமான நாயகன் ரவிசந்திரன் பேசுவார்.
“சார் என்ன சார் நான் போய் என்ன சார் பேசுவேன்” மரியாதை தெரிந்த பயல் பழசை மறக்கல. பரட்டை தலையுடன் முதல் முறையாக பார்த்த போது இருந்த அதே பணிவு.

"சுமன் சார் எனக்கு குரு மட்டுமல்ல எனக்கு எல்லாமே அவர் தான். மழையின் பெருமையை மண் அறியும் “எங்க டைரக்டர் சார் “ அப்படி தான் அழைப்பேன் உங்களை எப்போதும் என் மனைவிடம். உங்க படத்தில் க்ளேப் அடிக்கும் பாக்கியம் கிடைத்தால் கூட போதும் சார் என் பேத்திகளிடம் சொல்லி கொள்ள.

விழா ஒரு வழியாக முடிந்துவிட்டது. எல்லாம் அதே பாராட்டு வசனங்கள். இதற்கு மேல் சாதிக்க எதும் இருக்கிறதா தெரியவில்லை. இன்று முன்னனி நடிகர்கள் எல்லாம் நான் வளர்த்து விட்ட பசங்க. 100 படம் முடிச்சாச்சு. இப்போது இந்த உயிர் போனாலும் ஒரு ஆயிரம் வருடத்துக்கு தமிழகம் பேசும்.

அப்பா டைமாச்சு இப்போ கிளம்புனாதான் சரியாக இருக்கும். விடும்மா FLIGHT க்கு இன்னும் நேரம் இருக்கு. கார் ஏர்போர்ட்டை நோக்கி விரைந்து கொண்டு இருந்தது.

உலகம் முழுவதற்கும் தெரிந்து இருப்பதில் சில செளகர்யங்கள் இருக்க தான் செய்கின்றன. airportயில் எல்லாருக்கும் என்னை தெரிந்திருந்தது. கடந்து செல்லும் ஒவ்வொரு முகமும் ஸ்நேகத்தை உதிர்த்து சென்றது. அப்பாவை பகைத்து கொண்டு பெரிய நிறுவனத்தின் உயரிய பதவி என்று எல்லாவற்றையும் துறந்தது இதற்காக தான்.

கடந்து சென்ற எல்லா சிநேக முகங்களூக்கும் சின்ன தலையசைப்புடன் என் இருக்கையில் அமர்ந்தேன்.என் பக்கத்தில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். மிகவும் மரியாதையுடன் என்னை பார்த்து தலையசைத்தான். என்னை தெரிந்திருக்கலாம். தமிழ் பையனாக தான் தெரிகிறது. அவன் முகத்தில் மிசையில்லை ஒரு 12யிலிருந்து 13 வயது இருக்கலாம். ப்ளு ஜீன்ஸ், ரெட் டீ சர்ட், ஆழகான மூக்கு மிகவும் நிளமாகவோ அல்லது சப்பையாகவோ இல்லாமல் அளவாக அளந்து செய்தது போல் இருந்தது. கண்கள் எவரையும் கவர கூடியது நில நிற கண்கள். புனை கண்கள் என்று ரகு கிண்டல் செய்வான். நல்ல ஆரிய நிறம். கையில் ஆணிந்திருந்த டைட்டன் வாட்ச் இந்தியன் என்பதை காட்டியது அவனுடன் பேச வேண்டும் போல் இருந்தது.

“சார் are you from tamil nadu” மிகவும் நளினமாக இருந்தது அவன் கேட்டது. “yes and you are from” “ I am from London but do you know my mother speak tamil” “do you speak tamil”

“ I am learning now, கற்று கொண்டு இருக்கிறேன் தமிழ் மிகவும் அருமையான மொழி “
எனக்கு ஒன்றும் புரியவில்லை இவன் கிண்டல் செய்கிறனா, I am learning என்று சொல்லி விட்டு செந்தமிழ் பேசுகிறான் . “நல்ல பேசுறே” “போன வருடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன், அம்மாவுக்கு நேரம் இல்லை ஆகையால் புத்தகங்கள் உதவியது என் தமிழ் ஆசிரியர் திரு ரகு அவர்கள். ஆனால் என் அம்மா நான் பேசுவதை கண்டு சிரிக்கிறார். நான் தவறாக பேசுகிறானா ஜயா” “ஜயா சாமி என்னை தலை சுற்றுகிறது இவனிடம் என்ன சொல்வது என்னை கிண்டல் செய்கிறானா அப்படி தோன்றவில்லை. “ சரியாக பேசுறே “ ஆமைதி காத்தேன்.

“கையில் எதோ புத்தகம் வைத்திருந்தான்” “what you do sir” “ I am director” “for which company” நல்ல வேளை பக்கத்தில் சுதா இல்லை அவள் சிரிப்பு சப்ததில் விமானம் வெடித்திருக்கும்” “film director” “ film, do you mean movies” “ஆம் என்று தலையசைததேன். அவன் எதுவும் பேசவில்லை “do you watch movies” “movies no I like too, but you see I am busy, வேலை அதிகமாக இருக்கிறது” “ in which language you are making movies” tamil, “obviously” என்று சிரித்தான்.

“நான் சென்ற வருடம் ஒரு இயங்குனரை சந்த்திதேன் அவரது பெயர் james Cameroon” உங்களூக்கு அவரை தெரியுமா” “இவனை என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை” “VERY NICE GUY, அவரது படத்தை பார்ப்பதாக வாக்குறுதி அளித்து இருந்தேன் நேரம் கிடைக்கவில்லை” “OK UNCLE, எனக்கு நிறைய படிக்க வேண்டி இருக்கிறது, நான் புத்தகம் எழுதி தருவதாக அப்பா வாக்குறுதி அளிந்துள்ளார். Don’t disturb me”

What are you writing” “ It is on bioengineering “ எனக்கு எதுவும் பேச தோன்றவில்லை, “இது வரை மூன்று புத்தங்கள் எழுதிவிட்டேன் அனைத்தும் அறிவியல் சம்மந்தமானது இந்த முறை நான் தத்துவ சம்மந்தமாக எழுத நினைத்தேன்” “ A comparison between east and west philosophy” “uncle do you have books on tamil literatue” “என்ன புத்தகம் வேண்டும்” கலிகத்து பரணி இருக்கிறதா. இல்லை என்றேன். “திருக்குறளூக்கு உரை எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது, இது வரை படித்த எந்த உரையும் திருப்தியாக இல்லை. அடுத்த என்ன ஆதிர்ச்சி கொடுப்பானோ என்ற பயம் இப்போது
நீங்கி விட்டது “அனைத்து விதமான ஆதிர்சிக்கும் மனம் தயராகிவிட்டது. அவன் “ தன்னூடைய
புத்தகத்தை திறந்து வைத்து படிக்க ஆரம்பித்தான்.

“It is been a wonderful experience, உங்களூடைய படத்தை அனுப்பி வையுங்கள் நேரம் கிடைக்கும் பார்க்க முயற்சிக்கிறேன்”

“அப்பா பையன் என்ன சொல்றான் உங்களூக்கு எல்லா வயசியிலும் fans இருப்பது சந்தோசமாக இருக்கிறது.”

அவளிடம் எதும் சொல்லாமல் நடந்தேன், நிண்ட காலமாக சுமந்திருந்த ஏதோ ஒன்று கழண்டு சென்றதுப் போல் இருந்தது.




















No comments:

Post a Comment