Saturday, August 14, 2010

பிரளயம்

நான், முடிவு செய்து விட்டேன்”, உங்களில் யாருக்காவது எதிர் கருத்து இருக்கிறதா” பெரும் கடவுளின் இக்கேள்விக்கு சபை மவுனம் காத்தது.

இவ்மாபெரும் சபையினர் அனைவரும் என் முடிவை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புவேன்”
“தலைவா ஒரு நிமிடம் , உங்கள் முடிவில் உடன்பாடு இல்லை” சிறு கடவுளர்களின் பிரதிநிதி வீனேஸ் நின்றான்.

பெரும்கடவுளின் கண்கள் கோபத்தில் சிவந்தன என்னை எதிர்த்து பேசுபவன் ஆழிந்து போவான்”

“இவ் பிரபஞ்சம் என் முப்பாட்டானரின் சொத்து, இதை ஒரே இரவில் ஆழிப்பதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.”

எனக்கு எல்லா அதிகாரம் உண்டு” பெரும் கடவுள் கர்ஜித்தார்” நான் மாபெரும் பிரபஞ்சத்தின் தலைவன், இதை அழிப்பதற்கு உரிமையும் புது சிருக்ஷ்டியை படைப்பதற்கான் ஆற்றலும் எனக்கு உண்டு.”

எங்கே கடலரசன், கடல் பொங்கட்டும் ஒரே இரவில் இந்த பால்வீதி அழியட்டும், ஒரு கிரகம் இன்னோன்றுடன் மோதும் அழகை நானும் என் மகனும் முற்றதிலிருந்து ரசிப்போம். இந்த பால்வீதியின் இயக்க வீதிகளை மாற்றுகள், இவ்பூமியின் உயிர்கள் வீண் நோக்கி தூக்கி எறிய பட வேண்டும், சுரியனின் வெப்பதில் இவ்பூமி கருகட்டும்”

அரசரின் முடிவு அதுவானால் அதை எதிர்ப்பது என் கடமையாகும்”

உன் முடிவு அதுவானால் உன் அழிவு என் உரிமையாகும்”

“வீண் பேச்சு தேவையில்லை போருக்கு தயாராகுங்கள்”
நிலைமை வீபரிதமாக போய் கொண்டு இருந்தது”

அரசே பொறுமை கொள்ளூகள்” ஜீரோத் எழுந்தார். அந்த வயதான கிழவன் மீது பெரும்கடவுளூக்கு மரியாதை இருந்தது.”

அரசே வினேஸ் மட்டுமல்ல இங்கே பலருக்கு அந்த எண்ணம் இருக்கிறது”
அதனால் என்ன செய்ய சொல்கிறீகள் என் முடிவுலிருந்து நான் பின் வாங்க முடியாது. இன்னும் பொறுமை காத்தால் மனிதன் புது பிரபஞ்சதின் அதிகாரி ஆகி விடுவான்”

நான் சொல்வதை எல்லோரும் கேளுங்கள், இதோ நிற்கிறன வீனேஸ் இவனின் தாத்தாவின் படைப்பு தான் இந்த பால்வீதியும் இந்த மனிதனும் ஆறாவது அறிவை படைக்காதே என்று தடுத்தும் கேட்காமல் இவன் தாத்தா செய்த தவறு இன்று மனிதன் உயிரின் வேர் வரை சென்று விட்டான், ஆகையால் இவ் பால்வீதி ஆழிந்து ஆக வேண்டும்.

அரசே உங்களின் பொழுது போக்குக்காகவே மனித இனம் படைக்கப்பட்டது, அவர்களது விளையாட்டுகளும் சாதனைகளும் அற்ற ஒரு பிரபஞ்சம் சுவராஸ்யம் அற்று இருக்கும்”
“ஜீரோத், உங்கள் மீது எனக்கு மரியாதை உள்ளது, நிலைமை கைமீறி போய் கொண்டு இருக்கிறது என்ன செய்ய சொல்கீறீர்கள்”

கருத்து வேறுபாடு எழும் போது, ஜீனிஸ் சபையை கூட்டுவது தான் மரபு” எல்லா கடவுளர்களும் கூடும் அவ்சபையில் பெரும்பான்மையினர் கருத்து ஏற்கப்படும்.
பெரும் கடவுள் யோசித்தார், சரி அப்படியே ஆகட்டும்” நாளை ஜீனிஸ் கூடும்.

வினேஸ் தன் அறையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான்.” நாளை ஜீனிஸ் சபையின் முடிவு எதுவாயினும் பெரும் கடவுள் அதை ஏற்க போவதில்லை பால்வீதியை அழிக்கும் எண்ணத்தில் அவர் உறுதியாக இருக்கிறார், நூறு வருடங்களூக்கு முன்பிருந்த அந்த ஆசை அவருக்கு உண்டு.

கதவு பலமாக தட்டப்பட்டது. ஜீரோத் உள்ளே நுழைந்தார், “வீனேஸ், பேரரசர்
ஆணைப் படி உங்களை கைது செய்கிறேன் “நாளை ஜீனிஸ் கூடும் போது முடிவு என்னவாக இருக்கும் வினேஸ்க்கு தெரிந்துவிட்டது.

“பால்வீதியே என் செல்லமே என் தாத்த உன்னை உருவாக்கிய போது அடைந்த மகிழ்ச்சியை கேட்டு கேட்டு வளர்த்தவன், மனிதா உன் ஆற்றலுக்கு தலை வணங்குகிறேன் “ உனக்கு விடை கொடுக்கும் நாள் நெருங்கி விட்டது.

பெரும் கடவுள் அரியானையில் அமர்ந்து அணையிட்டார், “ தொடங்கட்டும் அழிவு இன்னும் சில தினங்களில் புது பால் வீதியை நிர்மானிக்க உரிமையை ஜீரோத் ஏற்பார். பெரும் கடவுள் அவரது மகனுடன் உப்பரிகையில் அமர்ந்தார், பிரபஞ்சத்தின் அழிவு தொடங்கட்டும்.

No comments:

Post a Comment