Sunday, November 7, 2010

ஒரு நட்பின் கதை

மழையை வேடிக்கை பார்ப்பது ரவிக்கு பிடித்தமானது. அதை தான் அவன் இப்போது செய்து
கொண்டுருப்பான் என்று நினைக்கிறேன். சென்னையில் இரண்டு நாள்களாக நல்ல மழை என்ற செய்தி வந்தவுடன் ரவியை பற்றியும் மழையை பற்றியும் யோசனை செல்கிறது. லண்டன் நகரித்தின் வீதிகளை மழை கழுவு செல்லும் காட்சிகளை சென்ற முறை அவனுக்கு மெயில் செய்திருந்தேன். ரவியின் மின்னஞல்கள் என் கணவர் பற்றியும் குழந்தையை பற்றியும் விசாரிக்க தவறுவதில்லை. சென்ற முறை புகைப்படத்தை பார்த்து விட்டு ராகுல் இளைத்துவிட்டார் சரியா சாப்பாடு போடலையா என்று கிண்டலடித்து இருந்தான். ரவியின் நினைவு எப்போதும் மனதின் ஒரு ஒரத்தில் ஒடி கொண்டு இருப்பாதாகவே தோன்றுகிறது. தீபக் அவனை போலவே இருக்கிறான் என்று தோன்றுவது உண்டு ஒருவெளை நான் அவ்வாறு அவனை வளர்க்கிறேன் போல. இருவரும் என்னை லது என்று கூப்பிடுகிறார்கள். நாளை அவனுக்கு முக்கியமான நாளாம்.
அவனுடைய பள்ளியின் football match. அம்மா நீ கண்டிப்பாக வர வேண்டு என்று ஆயிரம் முறை சொல்லி விட்டான். நான் இருந்தால் ஜெயித்து விடுவான் என்ற நம்பிக்கை. ரவியும் இதைப் போல் தான். நான் எப்போது எங்கும் அவனுடன் இருக்க வேண்டும் என்பான். அவன் முதலில் கலந்து கொண்ட பேச்சு போட்டிக்கு போன அந்த நாள் எனக்கு இன்னும் கூட நினைவு இருக்கிறது.
ஒரு மழைக்கால இரவு அது. அவன் அம்மாவும் அப்பாவும் அவனது பாட்டியை பார்க்க சென்று இருந்தார்கள். எங்கள் வீட்டில் தான் தங்கினான் அன்று இரவு முழுவதும் அவனது தொல்லை தாங்க முடியாது நான் விழித்தது நினைவு இருக்கிறது. “லது நான் மிண்டும் ஒரு முறை சொல்றேன் கேளூ,” “அப்பா சாமி என்னை விடுப்பா இதோடே 20 வது வாட்டி கேட்டாச்சு, இனிமே முடியாது”
இப்போதும் என்னால் அந்த இரவுன் மண் வாசனையை, எங்கள் போர்வையின் தூசியை உணர முடிகிறது. அந்த ஜந்தாம் வகுப்பு சிறுமிக்கும் சிறுவனக்கும் உலகம் மிகவும் சிறியதாக இருந்தது. அது அந்த அறைக்குள் அடைங்கி விட்டுருந்தது. ரவி போட்டியில் ஜெயித்த அந்த நாள் இரவு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்தான். அடுத்த நாள் காலை அம்மா, தலையனைக்கள் பிய்க்கப்பட்டு பஞ்சு காற்றின் பறந்தப்படியிருந்த காட்சியை பார்த்தாள். என் குழந்தை பருவம், இளமை பருவம், என எல்லாவற்றிலும் ரவி இருந்துள்ளான். என் திருமண பேச்சை எடுத்த போது மற்ற பிரிவுகளை விட அவனது பிரிவை பற்றி யோசித்த இரவுகள் நீளமானவை. நாங்கள் இருவரும் ஏன் காதலிக்கவில்லை என்று ஒரு முறை ராகுல் கேட்டார். “தெரியலா, may be he knows me too well” . ஆனால் நாங்கள் என் காதலிக்கவிலை என்ற கேள்வி எனக்கு கல்யாணத்தன்று தான் தோன்றியது. காதலித்திருந்தால் நன்றாக தான் இருந்திருக்கும். ஒரு வேளை ஜானுவை அவன் பார்க்காமல் இருந்திருந்தால் என்னிடம் காதலை சொல்லிருப்பானோ. என்னை தாண்டி அவனுக்கு பல நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் அந்த நண்பர்களை தாண்டியும் நான் இருந்தேன். கல்லூரி நாள்களில் எங்கள் group பெரியதாக இருந்தது. ரவிக்கும் எனக்கும் தூரங்கள் அதிகரித்த நாள்கள் அவை. நான் பெண்னாகவும் அவன் ஆணாகவும் இருப்பதால் விழுந்த தூரமது. ஜானுவை எனக்கு அவன் அறிமுகம் செய்த அன்று ஏனோ சிறு பொறாமை அவள் மீது. அவர்கள் திருமணத்தில் தான் எத்தனை பிரசனைகள். “லது எல்லோரும் ஒத்துப்பாங்கே இல்லை”ரவிக்கு ஏனோ நான் அவனுடன் இருப்பதில், அவன் சொல்வதை கேட்பதில் ஒரு energy கிடைப்பதாக சொல்வான். அவனுடன் எப்போதும் இருந்துள்ளேன், ஜானுவின் பிரவசத்தின் போது “ராகுலின் கையை பிடித்து கொண்டு கேட்டான் “please லது இங்கே இருக்கட்டுமே” என் மாமியார் மாமனார் எதிரில் அவன் கேட்பான் என்று நினைக்கவில்லை. “ஏங்கே அம்மா ஏதாவது நினைச்சிக்க போறங்கே” எப்போதுமே ரவிக்கு சின்ன சின்ன ஆசைகள் உண்டு. மழையில் நனைந்து கொண்டே இளையராஜா பாட்டு கேட்க வேண்டும். ரஜினி படத்துக்கு முதல் நாள் போக வேண்டும். ஒரு நாள் விளையாட்டாக சொன்னான் “லது எனக்கு ஒரு சின்ன ஆசை” நம்முடைய ஆறுபதாவது பிறந்த நாள் அன்னிக்கு உன் கை கோர்ந்துகிட்டு நம்ம school groundயை சுத்தி வரணும்.

No comments:

Post a Comment