Wednesday, July 28, 2010

பட்டாம்பூச்சியின் கனவுகள்


ஏன் கடவுள் ஆசிரியர்களை மிகவும் மோசமானவர்களாக படைத்திருக்கிறார் என்று தெரியவில்லை அல்லது ஏன் நல்லவர்களாக
படைக்கவில்லை கடவுள் எந்த பள்ளிக்கூடத்திலும் படிக்கவில்லை என்று
தாத்தா சொன்னார் ஒரு வேளை கடவுளுக்கு என்னை போன்ற அப்பாவி
மாணவர்களின் கஷ்டம் தெரியவில்லை என்று நினைக்கிறேன் அல்லது
தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.


கடவுளை ஒரு
நாள் வனிதா மிஸ் க்ளாஸில் உட்கார வைத்தால் எப்படி இருக்கும் என்று
அடிக்கடி யோசிப்பதுண்டு ராகவன் போன்று அவரும் ஐந்து நிமிடத்தில்
தூங்க ஆரம்பித்து விடுவார் என்று நினைக்கிறேன் யார் தூங்கினாலும்
கவனித்தாலும் வனிதா மிஸ்யிடம் எந்த மாற்றமும் எற்பட போவதில்லை.


சாக்பிஸை கையில் பிடித்து விட்டால் அவரது கவனம் ப்ளாக் போர்டிலிருந்து சிதறாது எதையோ பேசிக் கொண்டு போர்டில் எழுதிக் கொண்ட போவார் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது இது வரை
எனக்கு புரிந்ததில்லை புரிந்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு ஒரு பெரிய விஷயமாக இருக்காது என்று நினைக்கிறேன் ஒரு நாள் ரவி சொன்னான்
"உனக்காவது மிஸ் என்ன சொல்றாங்கன்னு புரியலை எனக்கு அவங்க
என்ன பாஷை பேசிறாங்கன்னு தெரியலை" விசாரித்து பார்த்ததில்
இந்த பிரசனை பலருக்கு இருந்தது தெரிய வந்தது ஆனால் வனிதா
மிஸ்யை எங்களில் பலருக்கு பிடித்து இருந்தது காரணம் அவர் ஒருவர் தான்
க்ளாஸ்க்கு பிரம்பு கொண்டு வராதவர் க்ளாஸில் என்ன நடந்தாலும் கண்டுக் கொள்ள மாட்டார் வனிதா மிஸ் கொஞ்சம் ஆழகாகவும் இருப்பார் என்பதால் அவரை பிடித்திருந்தது அல்லது பிடிக்காதவர்களின்
லிஸ்டில் இல்லாமல் இருந்தார். 


எங்கள் எல்லாருக்கும் பொதுவான எதிரி
வித்யா மிஸ் தான் அவருக்கு  பல பட்டப் பெயர்களை சுட்டியிருந்தோம்
சந்திராமுகி என்பது எனக்கு பிடித்திருந்தது மாணவர்கள் படிப்பதை
தவிர வேறு எதையும் செய்ய கூடாது என்பது வித்யா மிஸ்யின் கொள்கைகளில் ஒன்று சண்டேவில் நாங்கள் யாரும் நிம்மதியாக இருக்கக்
கூடாது என்று ஏகப்பட்ட home work கொடுப்பதை வழக்கமாக
கொண்டு இருந்தார் யாராவது ஹொம் ஒர்கையை செய்யவில்லை என்றால்
அவர் முகத்தில் சந்தோஷம் தாண்டாவமாட ஆரம்பித்து விடும் தண்டனைகள் தருவதிலும் கண்டுபிடிப்பதிலும் அவருக்கு ஆர்வம் மற்றும்
தேர்ச்சியும் இருந்தது ஹிட்லரின் நாசிச கொள்கைகளில் அவருக்கு மிகுந்த
நம்பிக்கை இருந்திருக்க வேண்டும் முட்டிப் போட சொல்வது பிரம்பால்
அடிப்பது போன்ற சின்ன சின்ன தண்டனைகளின் அவருக்கு
அதிக ஆர்வம் இல்லை அவரது தண்டனைகள் வித்தியசமானவைகளாக இருந்தன
அவரது தண்டனைகள் சுவாரஸ்யம் நிரம்பியவைகளாக இருந்த போதிலும்
கேட்பவர்களை திகிலடைய செய்யக் கூடியவை. 


வித்யா மிஸ்யை எதிர்த்து கேள்வி கேட்க பள்ளியில் யாருக்கும்
தைரியம் கிடையாது. அவரது தண்டனைகளுக்கு பயந்து நாங்கள் அவரது
பாடக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தோம் மற்ற பாடங்களில்
முட்டை மார்க்கையே அதிகபட்சமாக வாங்கும் தினேஷ் போன்ற ஆட்கள் கூட வித்யா மிஸ் பாடகளில் பாஸ் மார்க் வாங்கி விடுவார்கள். வித்யா மிஸ்யை பிடித்தவர்கள் என்று யாராவது எங்கள் பள்ளியில் இருப்பார்கள்
என்றால் அவர்கள் உலக ஆதிசயங்களில் ஒன்றாக இருப்பார்கள். அப்படி பிடித்து இருந்தாலும் அதை ரகசியமாக வைத்திருப்பது நல்லது பாதிக்கப்பட்டவர்களால் அவரகளது உயிர்க்கும் உடமைக்கு பாதிப்பு ஏற்பட கூடும் உண்மையில் அப்படி ஒரு உலக அதிசயம் எங்களில் ஒருத்தி
இருக்கிறாள் என்ற விஷயம் போன் மாதம் எனக்கு தெரிய வந்தது.


லதா
பயந்தப்படியே எனக்கு அந்த உண்மை சொன்னாள் "ரகு யார்க்கிட்டேயும்
சொல்லிடாதே வித்யா மிஸ்யை எனக்கு பிடிச்சியிருக்கிடா"
என்ன கொடுமை சரவணன் இது என்று கூட எனக்கு சொல்ல தோன்றவிலை "ஆமாம்டா முன்னே எல்லாம் எனக்கு இங்கிலிஸ்யில்
நாலு எழுத்துக் கூட எழுத தெரியாது இப்போ பார் என் லிவு லெட்டரை நானே எழுதிறேன் இதுக்கு காரணம் வித்யா மிஸ் தானே" ஒரு எட்டாம்
வகுப்பு மாணவுக்கு இவ்வளவு பரந்த சிந்தனை இருப்பது நல்லதல்ல
என்று தோன்றியது. "அம்மா தாயே இதே போல் வேறு யார்க்கிட்டேயும் சொல்லிடாதே சந்திராமுகியை பழி திர்க்க அலையும் கும்பலுக்கு இந்த விஷயம் போனால் உன் நிலைமை விபரிதமாகும்" என்று எச்சரித்தேன்
ஆனால் என்ன செய்வது நல்லவர்களின் எச்சரிக்கையை யார் மதிக்கிறார்கள் லதா சரியான ஒட்டைவாய் வித்யா மிஸ் நல்லவர் என்ற
தனது அதி அற்புத கண்டுபிடிப்பை அவள் பிரியாவுடம் சொல்ல பிரியா
பாலுவிடம் சொல்ல பாலு மோகனிடம் சொல்ல மோகன் சுதாவிடம் சொல்ல சுதா தியாகுவிடம் சொல்லி விட்டாள். தியாகு வித்யா மிஸ்யால்
பாதிக்கப்பட்டவர்களில் முக்கியமானவனாக இருந்தான் வித்யா மிஸ் அவனை வைத்து பல பரிசோதனைகள் செய்து வந்தார்கள் . வித்யா மிஸ்யை பழி தீர்க்க அலைந்து கொண்டுருந்த கும்பலுக்கு தியாகு தலைமை
வகித்து வந்தான் . பல திட்டங்கள் போடுவதும் பிறகு பயந்தினால் ரத்து செய்வதும் அந்த கும்பலுக்கு வழக்கமாக இருந்தது.


தியாகுவுக்கு லதாவின்
கருத்து எந்த அளவுக்கு வெறுப்பு ஏத்திருக்கும் என்பது உவமைகளுள் அடங்காத விஷயம் லதாவை ஒரு நாள் இடைமறித்து தன் சந்தேகத்தை
கேட்டான் " வித்யா மிஸ் ரோம்ப நல்லவங்கன்னு சொன்னியாம்"
அந்த அப்பாவி பெண் சும்மாயிருந்திருக்கலாம் "ஆமாம்டா சொன்னேன்
நீயெல்லாம் பாஸ் மார்க வாங்கறன்னா அவங்க தானே காரணம்" என்றாள்
லதாவுக்கு எழரை நாள் சனி பிடித்த நிமிடம் அது தியாகு வகுப்பு முழுவதையும் ஒன்று கூட்டி லதாவுக்கு வித்யா மிஸ்யின் spy என்று
பட்டம் கட்டினான் அதன் பிறகு தமிழ்ப்பட நாட்டாமைகள் போன்று
லதாவை வகுப்பிலிருந்தி தள்ளி வைத்தான் " யாரும் இனிமே லதாக்கூட friendship
வைச்சிக்கே கூடாது அப்படி யாராவது அவக் கூட
வைச்சிக்கிட்டா அவர்களும் தள்ளி வைக்கப்படுவார்கள் " தியாகு என்ற எட்டாம் வகுப்பு நாட்டாமையின் தீர்ப்பை எதிர்க்கும் துணிவு எங்கள் யார்க்கும் இல்லை அவனது தீர்ப்பில் நியாயம் இல்லை என்ற போதிலும்
நானும் அந்த தீர்ப்பை மதித்து வந்தேன் ஆனால் இப்போது ஒரு பிரசனை.


வித்யா மிஸ் கொடுத்த assignmentயை முடிக்க முடியாமல் நான் திணறி கொண்டு இருந்தேன் இபபடிபபட்ட தருணங்களில் உதவும் என் ஆருயிர் நண்பன் ரகுவும் ஊரில் இல்லை
என் விட்டின் ஒரே புத்திசாலியான அக்காவும் பள்ளி சுற்றுலா என்று
சென்று விட்டாள் அப்பாவிடம் கேட்பதற்கு நானே எழுதி விடலாம் அம்மா தமிழ் என்றால் ஒருகை பார்த்து விடுவாள் முடிக்காமல் பள்ளி செல்வது கனவில் கூட நடக்க கூடாத நடக்க முடியாதே விஷயம் pace bowlingயை எல்மேட் அணியாமல் ஆடுவது போன்றது வித்யா மிஸ்யின் புதிய பரிசோதனைக்கு ஆளாக நேரிடும் லிவு போடலாம் என்றால் அம்மா விட மாட்டாள் 105 டிகரி என்றால் ஊசி போட்டால் சரியாகிவிடும் என்று சொல்லி பள்ளிக்கு அனுப்பும் பதாகி அவள் இருக்கும் ஒரே வழி லதாவை
சரணடையாவது தான் அவள் assignmentயை முடித்திருப்பாள் தியாகுவின் கோபத்துக்கு
ஆளாக நேரிட்டாலும் பரவாயில்லை என்று லதாவின் விட்டிற்கு செல்வது என்று திர்மானித்து நோட்புக்கை எடுத்து கொண்டு லதாவின் விட்டிற்கு சென்றேன்.


லதாவின் அம்மா என் அம்மாவும் தூரத்து உறவினர்கள் என்பதால் எனக்கு வரவேற்பு இருந்தது தன் மகளிடம் ஒருவன் சந்தேகம்
கேட்க வருகிறான் என்பதில் அவர்களுக்கு சந்தோஷம் லதா நான் எதிர்பார்த்தது போலவே assignment யை முடித்திருந்தாள் அவளிடம் வாங்கி
வேகமாக என் நோட்புக்கில் எழுதினேன் லதாவின் அம்மா கொடுத்த காபி குடித்துவிட்டு கிளம்பினேன் என் முடிவில் உறுதியாக இருந்தேன் இந்த ஒரு உதவியை வைத்துக் கொண்டு இவள் நட்பை புதிப்புத்திக் கொள்ள அனுமதிக்க கூடாது அது எனக்கு ஆபத்து 


அடுத்த நாள் நடந்த நிகழ்ச்சிகள்
மனசாட்சியை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியது வித்யா மிஸ்
ஒவ்வொருவராக கொண்டு வரச் சொன்னார்கள் லதாவின் முறை வந்த போது அவள் முகத்தில் கலவரம் தெரிந்தது பையை திரும்பி திரும்பி துழாவுக் கொண்டு இருந்தாள் " மிஸ் காணோம் மிஸ் காலையில் பையில் எடுத்து வைச்சேன் மிஸ்" "என்னடி நாடகம் ஆடுறியா கழுதை என்ன திமிறு இருந்த பொய் சொல்வே படிக்கிறதை விட்டுவிட்டு நடிக்க போன பெரிய ஆளே வருவே " லதாவை பார்க்க பாவமாகஇருந்தது திரும்பி தியாகுவை
பார்த்தேன் அவன் கிழே குனிந்து சிரித்து கொண்டு இருந்தான்
"வாடி இங்கே" லதாவுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை எல்லோரும் ஆர்வமாகவும் நான் கொஞ்சம் பதற்றதுடன் பார்த்துக் கொண்டு இருந்தோம்  நல்ல வேளையாக பெரிய அளவில் இல்லாமல் வகுப்பு முடியும் வரை முட்டி போடு என்பதோடு நிறுத்தி கொண்டார் ஆனால் லதா தொடர்ந்து தன் மேல் தப்பு இல்லை என்று வாதம் செய்தது விபரிதமாக முடிந்தது வித்யா மிஸ்க்கு கோபம் அதிகமாகி வெலுத்து வாங்கி விட்டார்கள். 


மதியம் லதா என்னை முறைத்து பார்த்து கொண்டு இருந்தாள்
நான் எழுந்து "ஆமாம் மிஸ் லதா சொல்வது உண்மை தான் நேற்று நானும் அவளும் சேர்ந்து தான் homwork செய்தோம்" என்று ஏன் நான்  சொல்லவில்லை என்பது அவளது கேள்வி ஆனால் நான் சொன்னாலும் மிஸ் நம்ப போவதில்லை மற்றும் தியாகுவை பகைத்து கொள்ளவேண்டி வரும் அடுத்த நாள் லதா பள்ளிக்கு வரவில்லை உடம்பு சரியில்லை
என்று அவளது அம்மா சொன்னார்கள் இரவு எல்லாம் உடம்பு முடியாமல்
அழுது கொண்டு இருந்தாக சொன்னார்கள். ஜூரம் அதிகமாகி ஆஸ்பத்திரியில் சேர்திருப்பதாக தகவல் வந்தது அவள் ஜுரத்தில் புலம்புகிறாளாம் என்று சுதா சொன்னாள் அவள் என்ன புலம்புகிறாள்
என்பது அவளது அம்மாவிற்கு தெரியவில்லையாம் 


எனக்கு தெரியும் " மிஸ் நான் பொய் சொல்லலை மிஸ் ப்ளீஸ்  நம்புங்க மிஸ்"











1 comment: