Saturday, August 14, 2010

சத்தம்

“மீண்டும் மீண்டும் அவர்களிடம் தோன்றுப் போகிறேன்” அந்த பெண்களின் உலகத்துக்குள் என்னால் நுழையவே முடிவதில்லை. நுழைவதற்கான அனுமதில்லை.” எவராலும் நெருக்க முடியாத ஒரு அகண்ட பேருலகில் அவர்களது அரசாட்சி நடந்து கொண்டு இருந்தது. மொழியின் எல்லைகள் முற்று பெற்று மவுனம் மட்டுமே அர்த்தம் கொண்டுருந்தது.

அவர்கள் எப்போதாவது தான் பேசிக் கொண்டார்கள். என்னை என்னுள் பேச வைக்கிறார்கள். ஒரு தந்தைக்கு தன் மகளின் புன்னகையை விட உயிர் வாழ்வதற்கான காரணம் இருக்க முடியாது. என் ப்ரியாவின் புன்னகை எனக்குள் நிரப்பிய ஆனந்தம் இது வரை நான் கண்டு அறியாதது.

லதாவின் வருகை ப்ரியாவிடம் எற்படுத்திய மாற்றம் அயிரம் கோடி நிலவை என் தோட்டத்தில் பூக்க செய்து இருந்தது. அவர்கள் விட்டின் பின்புறத்தில் விளையாடி கொண்டு இருப்பதாக கமலா சொன்னாள். மொட்டை மாடியில் நின்று கிழே விளையாடி கொண்டுருந்த அந்த சிறுமிகளை பார்த்து கொண்டு இருப்பதன் சுகம் எனக்கு ஒரு வாரமாக பழக்கமாகியிருந்தது.

அந்த இரு குட்டி தேவதைகள் ஒடி விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அவர்களது சிரிப்பு சத்தம் ஒரு அழகிய ரிங்காரமாக கேட்டு கொண்டு இருந்தது. லதாவின் முகத்தில் இப்போது மகிழ்ச்சி மட்டுமே நிறைந்து இருந்தது. ஒரு வருடத்துக்கு முன் இந்த முகத்தில் தான் எத்தனை தவிப்பு, பயம், தனிமை, அவளது கண்களில் தெரிந்த சோகத்தை, பயத்தை வாழ்வின் கோர முகத்தை சாட்சி சொல்லிய அவளது கண்கள் எனக்கு நினைவிருக்கின்றது. அந்த இலங்கை பெண் தன் அனைத்தையும் இழந்திருந்தாள்.

“அம்முவை பத்திரமா பார்த்திங்கோ “ அம்மா கடைசியா சொன்னாங்க சார்” பாவம் அம்மு பால் கிடைக்காமா பசியில் தினமும் அழுவுறா பால் கிடைக்குமா சார். “அம்மு என்று அவள் சுட்டி காட்டிய பொம்மை அவளது உள்ளகையின் வெதுவெதுப்பில் பத்திரகமாக இருந்த்து. “சொர்ணம்
கடைக்கு போய் பால் வாங்கிட்டு வா” “ அப்புறம் அம்மு எப்போ முழிப்பா” “தெரியலை சார், சொர்ணம்க்கிட்ட அம்முவை கொடு, அவ பால் கொடுத்து தூங்க வைப்பா.” சொர்ணம் அம்முவை வாங்கி சென்றாள்.

“அம்மா அப்புறம் என்ன சொன்னாங்க”

“எதோ சொன்னாங்க சார், பயங்கர சப்தமா இருந்ததா எதுவும் கேட்கலை.

அன்றிரவு எனக்கு தூக்கம் வரவில்லை, லதா என்ற 13வது பெண், தாயை இழந்திருந்தாள். தந்தை அவள் பிறந்த போது அவர்களுடன் இல்லை, அவளுடைய சோகத்தை பகிர்ந்து கொள்வதற்கு அவளது அம்மு மட்டுமே இருந்தாள். போரின் கோரம் அவளை பாதித்து இருந்தது. ஒரு சிறு இரச்சலை கூட அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவள் உடல் வியர்த்தது. கத்தினாள் கதறினாள் யருக்கும் புரியவில்லை ஒரு டம்ளர் கை நழுவி விழுந்தால் கூட அவள் அலறினாள். பயந்து மூலையில் பதுக்கி கொண்டாள். செஞ்சிலுவை சங்கம் அவளை என்னிடம் கூட்டி வந்திருநதார்கள். ஆனால் ஒரு மனோத்துவ மருத்துவர் என்பதை தாண்டி லதா என்னை பாதித்தாள். ஒரு அழகான ரோஜ இதழ் காற்றில் தவழ்ந்து மடியில் விழுந்தது.

எனக்கு புரிகிறது லதா மட்டும் வரவில்லை என்றால் நான் கொஞ்சம் கொஞ்சமாக அழுகி போயிருப்பேன் பிரியாவுக்கு லதாவின் நிலை எற்பட்டுருக்கும். ஜனவரி 3 என் மனைவியின் நினைவு நாள் என் மகளின் பிறந்த நாளும் அதுவே. என் மனைவி இழப்பை நான் என் மகளின் முலமாக மறக்க முயன்றிருந்த போது எனக்கு கமலா சொன்னாள் “நான் சந்தேகம் பட்டது சரி தான் அண்ணா பிரியாவுக்கு காது கேட்கலை she is deaf and dumb” என் கால்கள் தள்ளாடி சரிந்தேன் கமலா தாங்கி பிடித்தாள் “கவலைபடாதே அண்ணா கடவுள் இருக்கிறார்” ஆனால் எங்கே “அவரும் என் மகளை போலவே செவிடோ”

நான் என் சோகத்தை மறக்க போதையில் முழ்கினேன். பிரியாவை கமலா பார்த்து கொண்டாள். பிரியாவிடம் என்னால் பேச முடியவில்லை அவளது சைகை மொழி என்னை துக்கத்தில் அழ்த்தியது.

லதாவை நான் விட்டிற்கு அழைத்து வந்த போது பிரியா அவளிடம் ஒட்டி கொண்டாள். “லதாவால் பிரியாவின் அசைவிகளை புரிந்து கொள்ள முடிந்தது. “என் தங்கச்சி கூட பிரியா மாதிரி தான் சார் நான் அவ கூட நாள் பூரா விளையாடுவேன் .”இப்போ எங்கே இருக்கா” செத்துட்ட்டா’ லதாவும் பிரியாவும் விளையாட்டை தொடர்ந்தார்கள். இறப்பு இவளது வாழ்வில் ஒரு சாதாரண நிகழ்வாகியிருந்தது.

“என் குட்டி தேவதைகள் உலகம் எத்தனை விசித்திரமானது. சப்ததின் வாசனை அற்றவள், சப்தத்தின் விளைவுயிலிருந்தி ஒடி ஒளியும் இன்னொருவள். அவர்களது நட்புக்குள் சப்தம் இல்லை. அவர்களுக்கு தேவைப்படவில்லை. என் பிரியாவை ஊமை என்று அழைக்கும் உலகம் ஆனால் அவள் பார்வையில் அவர்கள் தான் ஊமையாக இருக்கிறார்கள். என் பெண்ணின் மவுன மொழி அவர்களுக்கு புரிவதில்லை.

அன்றிரவு ஒரு நிம்மதியான தூக்கம் எனக்கு காத்திருக்கும் என்று தோன்றிகிறது.

“மிகப் பெரும் ஆனந்ததிற்கு பிறகு ஒரு சோகம் காத்திருப்பதன் காரணம் எனக்கு பிடிப்படவில்லை. “அண்ணா அண்ணா இங்கே வா கமலாவின் குரலில் பதற்றம்”
லதா சுருண்டு கிடைந்தாள், “தலைவர் வீரமணி வாழ்க” பட்டாசு சத்தம் காதை பிளந்தது.வீரமணி வணிகர் சங்க தேர்தலில் பெற்ற வெற்றியை கொண்டாடி கொண்டு இருந்தார்கள். பிரியா அழுது கொண்டு இருந்தாள். என் கையை பிடித்து இழுத்தாள். பட்டாசு சத்ததின் தொடர்ந்த இரைச்சல் லதாவின் மூளை நரம்புகளை பாதித்து கோமாவில் முடிந்திருந்தது.

“அவளை அந்த பட்டாசு சத்தம் எந்த அளவுக்கு பாதிந்து இருக்கும் எப்படி துடித்து போயிருப்பாள் என்பதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை அந்த கூட்டத்தின் மீது வந்த கோபத்தை என்னால் என் சக உழியர்கள் மிது தான் காட்ட முடிந்தது.

“லதாவை intensive careயில் சேர்க்க வேண்டி வந்தது. பிரியா அழுது கொண்டே இருந்தாள். முதன் முறையாக அவளுக்கு என்னிடம் சொல்வதற்கும் கேட்பதற்கும் பல விசயங்கள் இருந்தன. என்னை பார்த்து “சைகை மொழியில் கைகளை நெஞ்சில் குவித்து மன்றாடினாள்” அவளது கைகளை கெட்டியாக பிடித்து கொண்டேன். “மன்னித்து விடு செல்லமே உன் தோழி நம்மை விட்டு வெகு தொலைவு சென்று விட்டாள்” என்பதை எப்படி சொல்வேன்.

பிரியாவின் டைரி
லதா சென்று விட்டாள் . என்னை விட்டு வெகு தூரம் இனி அவளை பார்க்க முடியாது. அவள் கண்கள் எனக்காக சிந்தும் அன்பு மொழிகளை நான் இழந்து விட்டேன் சத்தம் எனக்கு அன்னியமானது. ஆனால் அதுவே என் அன்பு தோழியை என்னிடமிருந்து பிரித்து விட்டது. அத்தை சொன்னாள் “லதா எப்போது நம்மிடையே இருப்பாள் “ ஒருவேளை அவள் சொர்க்கத்தில் அம்மாவை சந்திக்ககூடும் என்னை சார்ந்த எல்லோரும் சாமியிடம் சென்று விட்ட நான் மட்டும் இங்கே இருப்பதன் காரணம் புரியவில்லை. லதாவிடம் ஒரு வாக்குறுதி கொடுத்து இருந்தேன் “அம்முவை பார்த்து கொள்வதாக. “அம்முவை கையில் எந்தி அரவனைத்து கொண்டேன் தன் தாயை பிரித்து இருக்கும் தவிப்பை நான் அறிவேன்.

No comments:

Post a Comment