Friday, September 10, 2010

முகங்கள்

கடந்து செல்லும் நெசம் தழும்பும் முகங்கள், எப்போதும் போல் ஒரு சிறு மலர்ச்சியை உதிர்த்தவாறு கடந்து செல்கினறன. அவர்களின் முகவரியை தேடி பிடிக்க தோன்றும் கணங்களில் அவசர அழைப்புகள் வந்து சேர்கின்றன. மொழி அறிமுகத்தின் முன்பே முகங்களின் அறிமுகம் தொடங்கி விடுவதால் மொழியை விழுங்கிய உணர்ததலில் ஒரு வசிகரிப்பு இருக்கவே செய்கிறது. . ஒரு மணி நேர ரயில் பயணமும் சில நிமிட பேருந்து பயணமும் உடைய என் அலுவலக நாள்களால் முகங்களில் குவியல் மனதின் திரையில் சிதறி கிடக்கிறது.

காத்திருப்பும், ஜன நெரிச்சலும் நிறை காலை பொழுதுகளும், மனித வாசம தேட வேண்டிய இரவு பயணங்களும் கொண்ட என் நாள்கள் பல முகங்களை என்னுள் நிறைத்துள்ளது. என் நினைவு கூட்டுற்குள் அடிக்கி கிடைக்கும் முகங்கள் சொல்லும் சேதிகளின் பிரதலிப்புகளாகவே என் தேனிர் நேரகளும் என் தனிமை பொழுதுகளும் அமைக்கின்றன.

எப்போதும் தன் கைபேசியை தன் இன்னொரு உறுப்பாக கொண்டுள்ள அந்த கருட மூக்கு பெண்னின் முகம், ஏனோ லதாவை என் நினைவு பரப்பில் மிதக்க வைத்திடும். எனக்கு மிகவும் பிடித்த முகம் அவளுடையது. அவளது கன்னங்களும் எண்ணெய் வழியும் தோலும் எப்போதும் நீர் தேங்கியிருக்கும் அவளது கண்கள், அவளது முகம் நமக்குள் ஒளிந்திருக்கும் குழந்தையின் வெளிப்பாடாகவே எனக்கு தெரியும்.
காலை பொழுதுகளில் சில முகங்கள் பரபரப்பை கொண்டுருக்கும். ஒரு தோளில் பையை மாட்டி கொண்டு பிதுக்கி வழியும் ரயிலில் நிற்பதற்கு இடம் பிடிக்கும் முகங்களில் வாழ்க்கை யதார்த்த நொடிகள் ஒளிந்துள்ளது. இஸ்திரி போட்ட சட்டையுடன் கொஞ்சம் செண்ட் வாசனையுடன் ஒரு ஆறுபது வயது முகம் பேருந்து காத்திருப்பு நிமிடங்களில் தினமும் கடந்து செல்லும் ஒரு நாளாவது நிறுத்தி வாழ்க்கையை விவாதிக்க ஆசை.

ஒரு மெல்லிய நாணத்தை வெளிப்படுத்தும் அந்த அந்த நீல நிற சுடிதாரின் முகத்தில் யாரும் தன்னை பார்க்கவில்லையே என்ற ஜயம் தெரியும் அவளது பாட புத்தக்கத்தை வாங்கி பார்த்து என் கல்லூரி நினைவுகளை பகரிந்து கொள்ள ஒரு முறை எண்ணியதுண்டு.
பேருந்து பயணங்களில் தாவணி பெண்களை பார்க்க முடியும். அவர்களது முகம் பாமர தன்மமை நிறைந்திருக்கும் அவர்கள் பேசி சிரிக்கும் சத்தம் பொதுவாக வருங்கால கணவர்கள் பற்றி இருக்கும்.

எதோ ஒரு ரகசியத்தை தன்னுள் புதைந்து இருக்கும் சில முகங்கள். சக மனிதன் மீது அதீத அன்பையும் நம்பிக்கையும் கொண்டுருக்கும் சில முகங்கள். சில முகங்கள் ஒரு அழகிய கவிதையை தங்களுக்கு மட்டும் யாரோ வாசிப்பது போல் தோன்றம் தரும். சில முகங்கள் தெரியும் வன்மம் என்னை பயம் கொள்ள செய்யும். அந்த முகங்களுடன் வாழ்க்கை பகிர்ந்துக் கொள்ள கட்டாயமுள்ள மனிதர்கள் பின்னால் ஒளிந்துள்ள ஒர் வறண்ட வாழ்க்கை கொடுமையானது என்று தோன்றுகிறது. கடந்து செல்லும் குழந்தையின் கன்னத்தை கிள்ளும் கைகள் இவர்களுக்கு இல்லாமல் போகும் காரணம் தெரியவில்லை.

அப்படியான ஒரு வறண்ட முகம் எனக்கு சிறு வயதிலிருந்து மிகவும் பரிச்சயமானது. அது என் அப்பாவுடையது. அப்பாவின் முகம் எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கும் எந்த மாதிரி நிகழ்வையும் ஒரே மாதிரியாகவே அவர் எடுத்து கொள்வார். எல்லாமே பேத்தல் என்பது அவரது வாழ்வின் தத்துவார்ததமாக இருந்திருக்க வேண்டும். என் முதல் கதை வெளி வந்த போது அவர் அதற்கு கொஞ்சம் கூட பெருமைப்படவில்லை, அவர் எதற்கும் ஆரவாரிப்பதில்லை, வருத்தப்படுவதற்கு அவரிடம் எதுமில்லை சந்தோசப்படுவற்கும். அவருடைய முகம் மிகவும் இறுக்கமானது அவருடைய கண்கள் யானை கண்கள் போன்றது,சிறியது. அவரது மூக்கு என்னுடையது போலவே பெரியதாக அமைந்திருக்கும். கரிய நிற முகத்தில் மேடு பள்ளங்கள் ஒரு முதிர்ச்சி தன்மை தந்தது. அப்பாவை முகத்தை நான் பல தவிர்த்திருக்கிறேன். அவருக்கு எனக்கு ஒரு சுவர் இருந்தது அதை உடைக்க எப்போதும் இருவரும் முயற்சி செய்தது இல்லை.

ஜானுவின் முகம் மிகவும் சுவாரஸ்யமானது. அவளை எனக்கு பார்த்தவுடன் பிடித்து இருந்தது. அம்மாவின் முகத்தின் சுவாரஸ்யங்கள் அவளிடம் உண்டு. மிகவும் சிறிய நெற்றி எனக்கு பிடித்த உருண்டை முகம், கண்களின் அமைப்பு மட்டும் விசேஸமானது. நல்ல கரிய விழி. ஆனால் எல்லாவற்றை விட “ என்ன வெணும் சொல்லுட” என்ற பாவம் இருவர் முகத்தில் எப்போதும் ஒடி கொண்ட இருக்கும். ஜானுவும் அம்மாவும் என் மனதிற்கு அருகிள் உடையவர்கள் என்பதால் அவர்கள் முகத்தில் விசும் சீன வாசனை(மூக்கு காரணமாக இருக்கலாம்) மீறி நான் அறிந்த முகங்களில் ஆழகான முகங்களாக எனக்கு தோன்றுவது உண்டு.

அப்பாவிற்கு பிறகு நான் சந்திக்க தயங்கும் முகம் பாஸ்கருடையது. ஆதிகாரி என்றால் கஞ்சி போட்ட சட்டை போல் இருக்கு வேண்டும் என்று யார் சொல்லி கொடுத்தது என்று தெரியவில்லை. மனித வாசமற்ற முகம் அது. எங்கே சிரித்து விடுவோமோ என்ற அச்சத்தில் இருப்பது போல் தோன்றும் அந்த முகத்தை பார்பபதை தவிர்க்கிறேன்.

எல்லாவற்றை விட ஒரு முகம் எப்போதும் என்னை தன்னுள் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது. தூங்கும் போதும் விழிப்பு நிலையிலும் அது என்னுள் பூக்கும் அதன் வாசம் என்னுள் ஏற்படுத்தும் வலி….. அது ஜானுவின் முதல் பிரவசத்தில் இறந்து பிறந்த என் ராகுலுடையது ஏனென்றால் அதை பார்த்தது இல்லை.

No comments:

Post a Comment