Monday, September 13, 2010

உயிரொலி

இறப்பு விருந்தாளியாய் என் வாசலில் காத்திருந்திருக்கிறது. அதற்கு முன் இந்த கதையை எழுதி முடிக்க வேண்டும். பிரபல வார பத்திரிகைக்கு எழுதி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தேன். அதற்காக அவர்கள் அளித்த பணத்தில் தான் அப்பாவிற்கு மருந்துகள் வாங்கி இருந்தேன். சில கடன்களையும் அடைந்தேன். ஆகையால் கதையை எழுதி முடிக்க வேண்டியுள்ளது. என் இறப்பிற்கு பிறகு என்னை ஒரு கடங்காரனாக யாரும் கருதி விட கூடாது. போன வாரமே எழுதிருக்கலாம் இ பிரசனை இருந்திருக்காது. ஆனால் என்ன காரணத்தினாலோ எழதவில்லை. உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. மிகுந்த வலியில் சிந்தனை ஒட மறுத்தது.

ஒரு ரொமண்டிக் கதையை எழுத வேண்டியுள்ளது. என் கடைசி கதை ஒரு நகைச்சுவை கதையாக அமைவிருக்கிறது. எத்தனையோ நகைச்சுவை ததும்பும் காதல் கதைகளை எழுதியாகி விட்டது. இன்னும் இரண்டு மூன்று மணி நேரத்திற்குள் எழுதியாக வேண்டும். Mailயில் அனுப்பிவிட்டால் என் வேலை முடிந்துவிடும். வாங்கி வைத்த விஷம் தயாராக உள்ளது. குடித்த ஜந்து நிமிடத்தில் மரணம் நிச்சயம்.

“ரகு எங்கள் காலேஜின் சூப்பர் ஸ்டார்” அப்படி தான் நம்ப வைத்திருத்தோம். பிறகு ஒசி சீக்ரெட்டும், தலைவர் படத்துக்கு டீக்கேட்டும் யார் எடுப்பார்கள்.”

கதை முதல் வரியுடன் நிற்கிறது. கதையினை ஒருவாறு உருவகித்து விட்டேன். ரகு நண்பர்கள் தூண்டுதலால் லதாவை காதலிக்கிறான். லதா ஒரு மாடர்ன் பெண் ரகு அவளிடம் வழிவதை பயன்படுத்தி சில அழகு சாதன பொருள்களை வாங்கி கொள்கிறாள். பிறகு ஒரு நாள் தன் திருமண அழைப்பிதழை எந்த லஜ்ஜையுமின்றி ரகுவுடம் தருகிறாள்” இன்றைய காதல் கதைகள் இப்படி தான் முடிகின்றன. என்று முடிக்க வேண்டும்.மரணம் என்பது மிகப் பெரிய விடுதலையாக எனக்கு தோன்றுகிறது. விலிமிகுந்த நினைவு தளங்களிருந்து விடுதலை. நாளை என் தற்கொலைக்கான காரணங்களை ஊடங்கள் கவர் ஸ்டோரியாகும். ஆனால் இவர்களின் பிதற்றலை கேட்கும் அவசியம் எனக்கு இருக்காது என்பது எத்தகைய இன்பமான விடுதலை. வாழ்வதற்கான காரணங்கள் குறைந்து போன எனக்கு சாவதற்கான காரணங்கள் தேவைப்படவில்லை.

கதையின் பாதியை எழுதியாகிவிட்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்துவிட வேண்டும். சரியாக பத்து மணிக்கு விஷம் அருந்த வேண்டும். நான் பிறந்த நேரமது என்று அம்மா சொல்வாள். அம்மா முகம் என் நினைவி திரையின் சலனத்தை ஏற்படுத்திக்கிறது. அவள் ஏன் அப்படி செய்தாள். என் தற்கொலை பின் அம்மாவிக்கு பிள்ளை தப்பாக பிறந்திருக்கிறான் என்று உலகம் சொல்லுமோ.

“லதாவிடம் ரகு வழிந்து கொண்டு இருந்த அழகை சொல்லி சொல்லி மாலா சிரித்தாள். சரியான ஜொள்ளு வாயன் லிட்டர் லிட்டரா வழிறான்” லதாக்கிட்டே சொல்லி வை எதுவானாலும் FIFTY FIFTY.போங்கடா லதாவை பத்தி எனக்கு தெரியும் உனக்கு பெப்பே உங்க அப்பாவுக்கு பெப்பேன்னு போய்கிட்டே இருப்பா”

கதை முடிய இன்னும் நாலு பத்திகள் தான் தேவை. பிறகு நான் என் அம்மா சென்றதாக சொல்லப்படும் இடத்துக்கு செல்வேன், அவள் எனக்கு சிறு வயதில் பல இதிகாச கதைகளை சொல்வாள். அவள் மடியில் தலை சாய்ந்து கொண்டு ராமர் வில் உடைத்த காட்சியை கேட்டு இருக்கிறேன். பிற்காலத்தில் நான் ஒரு கதைசொல்லியாக ஆவதற்க்கு அவளே காரணம். அவள் இன்று என்னுடன் இல்லை. “ஏன் இப்படி செய்தாய் என்று அவளிடம் கேட்க வேண்டும். அவளை தூக்கு கயிற்றிலிருந்து இறக்கியே அந்த நிமிடத்தில் என் எல்லாமும் இழந்து நான் ஸ்தம்பித்து போனேன். ஆழுவதற்கு கூட சக்தியற்று போனேன். அவள் தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை. அப்பா படும் அவஸ்தை காண சகிக்க முடியாது சுமங்கிலியாய் போய் சேரும் ஆசையாக இருக்கலாம்.
மணி பத்து என்று கடிகார மூள்கள் காட்டியது கதை முடியவில்லை முடிக்க முடியும் என்று தோன்றவில்லை. பாதி கதையை mail செய்தேன்.

இந்த கதையை தொடர்ச்சி பிரபல தினசுடர் பத்திரிகை அலுவலக்கத்தில்.

“நிங்கே சொல்றதை நம்ப முடியலை ராமசந்திரன் சார் தற்கொலை செய்துக்கிட்டாரா எப்போ”

நேத்து ராத்திரி பத்து மணிக்கு, விக்ஷம் குடிச்சிருக்கார்.
“என்ன உளறுறிங்கே இன்னிக்கு காலையிலே அவர் என் ரும்க்கு வந்து, பாதி கதையை mail பண்ணிட்டேன்னு சொல்லி மீதி எழுதி தந்திட்டு போனார்.

எங்கே காட்டுங்கே
“ இன்றைய காதல் கதைகள் இப்படி தான் முடிக்கின்றன.” அவருடைய கையெழுத்து தான்.
“so யாரோ பொய்யான தகவல் சொல்லியிருங்காக”
“வாய்பில்லை, அநாதையான அவருக்கு கொள்ளி வைச்சது நான் தான்.

No comments:

Post a Comment