Friday, September 17, 2010

மொழியற்ற ஒரு சமுதாயம்

ஆழ்ந்த ஆறிவு என்பது தகவல்களை அறிந்திருப்பதால் மட்டும் நிகழ்வதில்லை. அது தொடர்ந்த சிந்தனை வயப்பட்ட வாழ்வியல் காரணமாக நிகழ்கிறது. சிந்தனை என்பது படைப்பாற்றலின் முக்கிய உருபாகும். படைப்பாற்றல் ஊக்குவிக்கும் குடும்ப, சமுதாய அமைப்பு ஒரு இனத்தின், ஒரு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கிறது. படைப்பாற்றல் இல்லா இனம் காலப்போக்கில் இன்னொரு இனத்தின் அடிவருடியாக மாறிப் போகிறது.

மொழி ஒரு சிந்தனையாளனின், ஒரு படைப்பாளியின் முக்கிய சாதனமாகும். ஒரு இலக்கியவாதிக்கு மட்டுமல்ல ஒரு சமுதாயத்தின் ஒட்டு மொத்த சிந்தனை வளர்ச்சிக்கும் மொழியின் பங்கு முக்கியமானது. சிந்தனை என்பது மொழியுடன் மிகுந்த தொடர்புடையது. பல்வேறு இயற்கை, சமுதாய நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து அவற்றின் அடிப்படை சாரத்தினனை புரிந்து கொள்வதற்கும் அதன் அடிப்படையில் புது கருத்துகோள்களை நிறுவதற்கும் மொழி அறிவு அல்லது வார்தைகளின் நிபுணத்துவம் முக்கியமானது.
மனதின் எழும் பல்வேறு நுண்ணிய உணர்வுகளை வார்தைகளாக மாற்றி அதை ஒரு பொது அனுபவமாக மாற்றும் ரசாயன வித்தை கவிஞர்களுக்கு மட்டுமல்ல அறிவியல் ஆராய்ச்சிக்கும் சமுதாய ஆய்வாளர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.

உலகியலோடு சாராத ரிஸி முனிவர்களுக்கு கூட வார்தைகள் முக்கிய தேவையாக இருந்துள்ளது. எந்த ஒரு புதிய சித்தாந்தமும் புதிய வார்தைகளுடன் பிறக்கிறது என்பதை நினைவில் கொள்க. திரண்டு இருக்கும் ஒரு மனிதனின் அறிவு அவன் உதிர்க்கும் வார்தைகளை அழத்தை பொறுத்தே நாம் அளவிடுக்கிறோம். பாரதியின் நவ கவிதைகள் நம்முள் ஏறபடுத்தும் தாக்கம் அவன் உருவாக்கிய புதிய வார்தைகளே. காட்சி பிழை எனும் வார்தையை கிரக்கும் மனது வாழ்வின் நிலையாமை தத்துவத்தை புரிந்து உணர்கிறது.

திரண்ட சிந்தனைக்கு மொழியின் அளுமை மிகவும் அவசியம். ஆனால் இன்றைய இந்திய இளைய சமுதாயத்தின் மொழி அளுமை குறித்த அச்சத்தை தவிர்க்க முடியவில்லை. மொழி அளுமை என்பது மொழியை தவறின்றி பேசுவது மட்டுமல்ல அந்த மொழியின் வார்தைகளை ஒடித்து கூட்டி கழித்து புதிய குறியிட்டு மொழியின் மூலமாக வடிவமற்ற அனுபவகளுக்கு உயிரும் வடிவமும் அளித்து சக மனிதனுடன் அந்த அனுபவத்தை பகிர்த்து கொள்வதுடன் அதை பொது அனுபவமாக மாற்றுவதாகும். புது கவிதை அதை தான் செய்ய முயல்கிறது.

இன்றைய இளைய சமுதாயம் எந்த மொழி அளுமை உடையதாக இருக்கிறது. தமிழ் என் தாய் மொழி ஆனால் பேச மட்டுமே தெரியும் எழுதவோ படிக்கவோ வராது. ஆங்கிலம் எழுத வரும் சரளமாக பேச வராது. வேறு மொழிகள் இந்தி அல்லது பிற இந்திய மொழிகளை புரிந்து கொள்ள மட்டுமே முடியும். நான் ஆங்கில நாளிதழ்கள் படிக்கிறேன் அதன் முலமாக செய்திகளை அறிகிறேன் ஆனால் என்னால் ஆங்கிலத்தின் ஒரு பத்தி கூட எழுத முடியாது தமிழில் எனக்கு கிடைத்துள்ள புது வார்தைகள் வடிவேல் தயவால் கிடைத்த “கொய்யலே” போன்ற வார்தைகள். பாதி தமிழ் இளைஞர்களுக்கு ஜெயமோகனை தெரிய வாய்ப்பில்லை. சிந்தனை என்பது கடன் வாங்கிய ஒன்றாக மொழி வளம் அல்லது வார்தை திரட்டு,என்பது வேறு இனத்தை நகல் செய்வதன் மூலமே அமையும் ஒன்றாகிறது. குறியிட்டு மொழி என்பது கலாச்சரத்தை ஆனிவேராக கொண்டது. வேறு ஒரு கலாசசரத்தை நகல் செய்யும் ஒரு சமுகத்துக்கு அது இல்லாமல் போகிறது. நதி போல் பிரவமாக வெளிப்பட வேண்டிய உணர்வுகள் குட்டையாகி போய் விடுகிறது. இறப்பு வீட்டில் நமது ஒப்பாரிகள் தன்னுடைய துக்கத்தை தெரியப்படுத்தி அதை பொது புரிதலுக்கு உள்ளாகும் வார்தைகளின் பிரவகத்தை காணலாம். சடரென்று திரும்பினேன் என்பதற்கும் டக்குன்னு TURN பண்ணென் என்பதற்கும் இடையே ஒரு மிகப் பெரிய கலாச்சாரத்தின் விழ்ச்சியுள்ளது.

இது ஆங்கிலத்தை மறுக்கும் வெறுக்கும் கட்டுரை அல்ல. ஆங்கிலம் நம்முடைய நாட்டில் தங்க போகிறது என்றால் அதன் இடம் என்ன என்பதை முடிவு செய்ய வேண்டும் அது நமது மொழியாக கலாச்சரத்தை சாயல் உடையதாக இருக்க வேண்டும். INDIAN ENGLISH SHOULD HAVE ITS PLACE IN WORLD STAGE. இங்கே நடப்பது என்ன நமது மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் ஒரு விடுப்பு கடிதமே பெரிய விசயமாக உள்ளது. அவர்கள் நாளிதழ்களில் கிரிக்கேட் ஸ்கோரை மட்டுமே பார்க்கிறார்கள். தமிழின் மிகப் பெரிய படைப்பாளிகள் ஒரு சிறு கூட்டத்த்துக்கு தங்கள் உயர்ந்த படைப்புகளை படைக்கிறார்கள். ஆர்த்தமற்ற சுவை குற்றிய வெகு ஜன இலக்கியத்திற்கு காரணம் ஒரு மொழி அற்ற சமுதாயத்தை நாம் உருவாகி வைத்திருப்பது தான்.

மொழி வளம் கடினமான, புலனங்கள் அறியா விசயங்களை படிமங்களாக மாற்றி ஒரு புரிதலை தருகிறது. சிந்தனை ஒரு மொழியின் குறியிட்டு வார்தைகளுடன் தொடர்புடையது. சொல்லடி சிவசக்தி என்ற பாரதியின் வார்தையின் ஆர்த்தம் முழுவதும் உள்வாங்கே நீங்கள் இந்திய ஆன்மிகத்தை அறிந்திருக்க வேண்டும் சிவசக்தி என்ற வார்தை முலம் பாரதி இந்த பிரபஞ்சத்தின் எல்லையற்ற செயல் சக்தியை படிமம்யாக்குகிறான்.
நான் நமது மொழி ஆசிரியர்களுக்கு சொல்வது ஒன்று தான் அவர்கள் ஆங்கில ஆசிரியர்களாக இருந்தாலும் தமிழ் அசிரியர்களாக இருந்தாலும் இந்த தேசத்தை மொழியற்ற தேசமாக மாற்றி விடாதீர்கள் நாளை நமது நாகரிகத்தை அறிவியலை, கலாசரத்தை தத்துவத்தை கற்க அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் மறைமுக அடிமைகளாக மாற்றி விடாதீர்கள். தாய் மொழியற்று வளர்வது என்பது தாயற்று வளர்வது போன்றது.

No comments:

Post a Comment